என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உற்சாக வரவேற்பு
நீங்கள் தேடியது "உற்சாக வரவேற்பு"
பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தர்மபுரி தொகுதி தி.மு.க. எம்.பி.க்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காரிமங்கலம்:
தர்மபுரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர். செந்தில்குமார் சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.
இதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த தி.மு.க. எம்.பி. டாக்டர். செந்தில்குமாருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாணவேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க நூற்றுக் கணக்கானோர் இதில் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தி.மு.க.வினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எம்.பி. செந்தில்குமார் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாதவரம் மாவட்ட கழக செயலாளர், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முருகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் தனக்கோடி, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பி.சி.ஆர். மனோகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், முன்னாள் அவைத் தலைவர் சிவாஜி, முன்னாள் துணைச் சேர்மன் யுவராஜ், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பெரியண்ணன் என சுமார் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே, மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இந்நிலையில், குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசாரும் வந்தனர்.
ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #Tamilnew
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X